கறவை மாடுகளுக்கு தேவைப்படும் நுண் சத்துக்களில் மிகவும் முக்கியமானது சுண்ணாம்புச்சத்து.
இந்த சத்து குறைபாடு ஏற்படும் போது மாடுகள் நிற்க முடியாமல் நடக்க முடியாமல் அமர் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
இது பெரும்பாலும் புதிதாக கன்று ஈன்ற மாடுகளில் காணப்படுகிறது.
இதை சரி செய்ய நாம் என்ன செய்ய வேண்டும்????
தினசரி சமச்சீர் தீவனம் மற்றும் தாது உப்புக் கலவை கொடுத்துவந்தால் சுண்ணாம்பு சத்து குறைபாடு ஏற்படாது.
அதிகமாக பால் கறக்கும் மாடுகளில் சுண்ணாம்பு சத்து அதிக அளவில் தேவைப்படுவதால் வாரம் இரு முறை பிரண்டை இரண்டு கைப்பிடி அளவு வெல்லத்துடன் சேர்த்து அரைத்து கொடுத்து வரலாம்.
5 கைப்பிடி அளவு கிளிஞ்சல்களை ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு நாள் முழுவதும் ஊறவைத்து அந்தத் ஒரு லிட்டர் தண்ணீரை கிளிஞ்சல்கள் நீக்கிய பிறகு கறவை மாடுகளுக்கு தீவனத்தில் சேர்த்துக் கொடுத்து வரலாம்.

குறிப்பு: ஒருமுறை பயன்படுத்திய கிளிஞ்சலை மறுமுறை பயன்படுத்தக்கூடாது.
தினமும் 5 கைப்பிடி அளவு கிளிஞ்சல் தேவைப்படும்.