🐄 சினை பிடிக்காத மாடா? இந்த 3 நிலைகளை தெரிந்துகொள்ளுங்கள்! | Dr JTK

மாடு சினைக்கு வரும்போது, ஒரே நேரத்தில் அனைத்து அறிகுறிகளும் தோன்றுவதில்லை. சினை அறிகுறிகள் பொதுவாக Pre-heat, Standing heat, Post-heat என மூன்று கட்டங்களாகக் காணப்படுகின்றன. இந்த நிலைகளை சரியாகப் புரிந்துகொள்வது, சரியான நேரத்தில் செயற்கைமுறை கருவூட்டல் (AI) செய்வதற்கு மிகவும் உதவும்.1️⃣ Pre-heat – சினைக்கு வருவதற்கு முன்இந்த நிலையில் மாடு அமைதியின்றி காணப்படலாம். மற்ற மாடுகளைத் துரத்துவது, அவற்றின் மீது ஏற முயற்சிப்பது, அடிக்கடி கத்துவது, வாலை உயர்த்துவது போன்ற அறிகுறிகள் இருக்கலாம்.ஆனால், மற்ற மாடு ஏறும்போது அசையாமல் நிற்பது பொதுவாக இன்னும் தொடங்கியிருக்காது. எனவே இந்த நிலையில் மட்டும் AI செய்வது சரியான நேரமாக இருக்காது.2️⃣ Standing heat – முக்கியமான சினை நிலைஇதுதான் விவசாயிகள் மிகவும் கவனிக்க வேண்டிய நிலை.மற்ற மாடு தன் மீது ஏறும்போது மாடு அசையாமல் நின்றால், அதை… Read more“🐄 சினை பிடிக்காத மாடா? இந்த 3 நிலைகளை தெரிந்துகொள்ளுங்கள்! | Dr JTK”

🐄 21 நாளுக்கு ஒருமுறை மாடு வலும்படிக்குதா? ஆனா சினை பிடிக்கலையா? | காரணம் என்ன?

மாடு சுமார் 21 நாட்களுக்கு ஒருமுறை வலும்படிப்பது (சினை அறிகுறி) இயல்பான இனப்பெருக்கச் சுழற்சியின் ஒரு பகுதியாக இருக்கலாம். ஆனால், தொடர்ந்து வலும்படித்தும் சினை பிடிக்கவில்லை என்றால், அதற்குப் பின்னால் சில காரணங்கள் இருக்கலாம்.🔹 சரியான நேரத்தில் சினை ஊசி போடப்படுகிறதா?மாடு வலும்படிக்கும் நேரத்தை சரியாகக் கண்டறிவது மிகவும் முக்கியம். வலும்படித்தவுடன் உடனடியாக செயற்கைமுறை கருவூட்டல் (AI) செய்வது எல்லா நேரத்திலும் சரியானது அல்ல. வலும்படித்த நேரத்தைப் பொறுத்து சரியான நேரத்தில் AI செய்வது கருவுறும் வாய்ப்பை அதிகரிக்கும்.🔹 கருப்பையில் பிரச்சினை இருக்கிறதா?கன்று ஈன்ற பிறகு கருப்பையில் தொற்று, அழற்சி அல்லது கருப்பை முழுமையாகச் சுத்தமாகாத நிலை போன்ற பிரச்சினைகள் இருந்தாலும் மாடு வலும்படிக்கலாம். ஆனால் கரு தங்காமல் போகலாம்.🔹 கருமுட்டை மற்றும் கருப்பை தொடர்பான பிரச்சினைகள்கருமுட்டை சரியாக வளராதது, முட்டை வெளிவரும் நேரத்தில் ஏற்படும் பிரச்சினைகள்… Read more“🐄 21 நாளுக்கு ஒருமுறை மாடு வலும்படிக்குதா? ஆனா சினை பிடிக்கலையா? | காரணம் என்ன?”

நாட்டு மாடு வளர்ப்போருக்கு ₹5,00,000 ரொக்கப் பரிசு! தேசிய கோபால் ரத்னா விருது 2026 முழு விவரம்

இந்திய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகம், நாட்டு மாடு மற்றும் எருமை இனங்களை வளர்க்கும் பால் உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதற்காக ஆண்டுதோறும் தேசிய கோபால் ரத்னா விருதை (National Gopal Ratna Award) வழங்குகிறது. ராஷ்ட்ரிய கோகுல் இயக்கத்தின் (Rashtriya Gokul Mission) கீழ் வழங்கப்படும் இவ்விருதுக்கான முழுத் தகுதிகள், பரிசுத் தொகை மற்றும் விண்ணப்பிக்கும் முறைகள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன. விருதுப் பிரிவுகள் மற்றும் பரிசுத் தொகை இவ்விருது மூன்று முக்கியப் பிரிவுகளில் சிறந்த சாதனையாளர்களுக்கு வழங்கப்படுகிறது: பரிசு நிலைமுதல் 2 பிரிவுகளுக்கான பரிசுத் தொகைசான்றிதழ் & நினைவுப் பரிசு முதலிடம்₹5,00,000உண்டு இரண்டாமிடம்₹3,00,000உண்டு மூன்றாமிடம்₹2,00,000உண்டு வடகிழக்கு / மலைப்பகுதி மாநிலங்கள் சிறப்பு விருது₹2,00,000உண்டு (செயற்கை முறை கருவூட்டல் பணியாளர் பிரிவிற்கு ரொக்கப் பரிசு இன்றி தகுதிச் சான்றிதழும் நினைவுப் பரிசும் மட்டுமே வழங்கப்படும்). விண்ணப்பிப்பதற்கான… Read more“நாட்டு மாடு வளர்ப்போருக்கு ₹5,00,000 ரொக்கப் பரிசு! தேசிய கோபால் ரத்னா விருது 2026 முழு விவரம்”

கால்நடை நண்பன் JTK WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறவும்

🐄 கால்நடை நண்பன் Dr JTK – இலவச பண்ணை ஆலோசனை குழு 🌱 கால்நடை விவசாயிகளின் நலனுக்காக Dr JTK அவர்களால் முன்னெடுக்கப்படும் ஒரு இலவச தன்னார்வ சேவை. இந்த குழுவின் மூலம் கால்நடை விவசாயிகளுக்கு எளிமையான மற்றும் நடைமுறைக்கு ஏற்ற ஆலோசனைகளை வழங்குவதே எங்கள் நோக்கம். 🩺 கால்நடை ஆரோக்கியம் & நோய் தடுப்பு 🌿 தீவனம் & ஊட்டச்சத்து மேலாண்மை ❤️ சினை & இனப்பெருக்க மேலாண்மை 🐄 பால் மாடு பராமரிப்பு 💉 நோய் அறிகுறிகள் & சிகிச்சை தொடர்பான பொதுவான வழிகாட்டுதல் 🐮 கன்று பராமரிப்பு & வளர்ப்பு 🌾 பண்ணை மேலாண்மை தொடர்பான ஆலோசனைகள் 💬 விவசாயிகளின் கால்நடை தொடர்பான சந்தேகங்களுக்கு வழிகாட்டுதல் 👨‍⚕️ Dr JTK-வின் நோக்கம் “ஒவ்வொரு கால்நடை விவசாயிக்கும் பயனுள்ள கால்நடை அறிவு எளிதாக… Read more“கால்நடை நண்பன் JTK WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறவும்”

ஆடுகளில் வயிறு உப்பிசம்

1. அரிசி மற்றும் அரசி சார்ந்த பொருட்களை உண்ணுதல் 2. உணவு பையன் பாதையில் அடைப்பு ஏற்படுதல் 3. தகாத தீவனம் மற்றும் உணவுக் கழிவுகளை உண்ணுதல் ஆடுகளைப் பொறுத்தவரை வயிறு உப்பிசம் ஒரு கொடிய நோய் உடனடியாக மருத்துவரை அழைப்பது சிறந்த வழி.முதலுதவியாக ஆப்ப சோடா மாவு ஒரு கைப்பிடி அளவு கால் லிட்டர் தண்ணீரில் கலந்து கொடுக்கலாம்.