
ஆண்டவனின் அருளைப் பெற்ற ஐந்தறிவு ஜீவனாய் விளங்கும் கால்நடைகளுக்கு வயிறு உப்பசம் வருவதற்கு காரணம் தீவனம் மேலாண்மையே. இந்த வயிறு உப்பசம் கால்நடை விவசாயிகலாலும், கால்நடைகளின் அறியாமையாலும் ஏற்படக் கூடிய ஒன்றாகும்.

காரணங்கள்
1. ஒன்றும் அறியாத கால்நடைகள் தனது பசியைப் போக்க அதிக அளவில் தீவனம் உட்கொள்வதால்
2. அறிந்தும் அறியாதது போல் மனிதர்கள் தங்களின் உணவான மாவு சத்து அதிகம் உள்ள அரிசியை கஞ்சியாக காய்ச்சி கொடுப்பதால் வயிறு உப்புசம் ஏற்படுகிறது.
3. பழைய புளிக்கப்பட்ட உணவுகளை (கழனி தண்ணீர்) தீவனத்துடன் மாடுகளுக்கு கொடுப்பதாலும்
4. தக்காளி, சாத்துக்கொடி, உருளைக்கிழங்கு, மரவள்ளி கிழங்கு போன்ற காய்கறிகளை நறுக்காமல் அப்படியே மாடுகளுக்கு கொடுப்பதன் மூலமாகவும் ஏற்படும்.
முதலுதவி
1. 150 கிராம் ஆப்ப சோடாவை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து மாட்டிற்கு கொடுக்க வேண்டும்
2. மருத்துவரின் ஆலோசனைப்படி 500 ml என்னையை கொடுக்கலாம்
3. வைக்கோலால் திரிக்கப்பட்ட கயிற்றை கொண்டு மாட்டின் மேல் தாடையில் இறுக்கமாக கட்டினால் மாடு அசை போட தொடங்கும் இதன் மூலமாக உமிழ்நீர் அதிகம் உற்பத்தியாகி வயிற்றுக்குள் செல்லும் அதுமட்டுமின்றி காற்று வெளியேறவும் உதவுகிறது.
4. பாதிக்கப்பட்ட மாட்டை விறுவிறு என வேகமாக ஓட்டினால் வயிறு உப்புசம் குறைய வாய்ப்பு அதிகம்.
குறிப்பு
கால்நடைகளுக்கு எந்த ஒரு தானிய வகையாக இருந்தாலும் அதை மாவாகவோ,வேகவைத்தோ,அரைத்தோ, ஊறவைத்தோ கொடுக்கக்கூடாது எந்த ஒரு தானியமாக இருந்தாலும் அதை குருணை வடிவில் அரைத்தோ அல்லது முளைகட்டியோ கொடுப்பதே சிறந்தது.
மேலும் விபரங்களுக்கு வயிறு உப்பசம் காணொளியை பார்க்கவும்
படைப்பு:
இ.இளையராஜா
கால்நடை மருத்துவ பட்டப் படிப்பு மாணவர்