
சீம்பால் என்பது தாய்ப்பாலுக்கு சமம். கன்று ஈன்றவுடன் முதலில் கிடைக்கும் பால் தரத்தில் உயர்வாகவும் திடமாகவும் கன்றுகுட்டி தேவையான அனைத்து விதமான சத்துக்கள் மற்றும் எதிர்ப்பு சக்தி நிறைந்த பாலாகும்.
கன்றுக்குட்டியின் முதல் மலத்தை கழிக்க சீம்பால் உதவுகிறது.

இயல்பாக அனைத்து வகையான பசுக்களிலும் சீம்பால் என்பது கன்று ஈன்று அதிலிருந்து மூன்று நாட்களுக்கு மட்டுமே வரும் அதன் பிறகு அந்த பாலானது தெளிந்து விடும்.
சில மாடுகளில் சீம்பால் 5 முதல் 10 நாட்கள் வரை வருவதற்கும் வாய்ப்புண்டு இதனால் எந்த ஒரு பாதிப்பும் இல்லை.
கன்று பிறந்தவுடன் அரை மணி நேரத்திற்குள் கன்றுக்குட்டிக்கு சீம்பால் கொடுக்க வேண்டும்