
மாடுகளின் கண்களில் நீர் வடிவதற்கு பல காரணங்கள் உண்டு இது சில சமயங்களில் இரு கண்களிலும் காணப்படும் அல்லது ஒருபுறம் மட்டும் காணப்படும்.
மாடுகளுடன் ஒப்பிடுகையில் கன்று குட்டிகளுக்கு அதிக அளவில் நீர் வடிவதை காணமுடியும் அதனுடைய காரணங்களையும் முதலுதவியையும் பற்றி காண்போம்.

காரணங்கள்
* தூசு, துரும்பு (பொதுவாக ஒருபுறம் மட்டும் நீர்வடியும் )
* நோய்த்தொற்று (இருபுற கண்களிலிருந்தும் நீர் வடியும்)
* மூக்கணாங்கயிறு சரியாக இல்லாத போது
* கண்களில் இருக்கும் புழுக்கள்
•சத்துக் குறைபாடு
* கண்களைச் சுற்றி ஈக்கள் மொய்ப்பதால்
முதலுதவி:
ஒரு கை பிடி அளவிற்கு கல்லுப்பை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து காலை, மதியம், மாலை என மூன்று வேளையும் மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கழுவி வந்தால் நீர் வடிவது குறையும்
செய்யவேண்டியவை
* தூசு ,துரும்பாக இருந்தால் மேலே கூறிய படி செய்துவந்தால் குணமாக அதிக வாய்ப்புள்ளது .
* மூக்கணாங் கயிற்றால் நீர் வடிகிறது என்றால் மூக்கணாங்கயிற்றை சரிசெய்யவேண்டும்.
* கண்களில் புழுக்கள் இருந்தால் அதை மருத்துவரின் சிகிச்சை மூலம் சரி செய்ய முடியும்.
* சத்துக் குறைபாடு என்றால் தினசரி 30 கிராம் தாது உப்பு கலவையை தீவனத்துடன் கொடுக்க வேண்டும்/ தினசரி 100 கிராம் முளை கட்டிய தானியத்தை அரைத்து கொடுக்க வேண்டும்.
குறிப்பு:
மூன்று நாட்களுக்கும் மேலாக நீர் வடிகிறது என்றால் கால்நடை மருத்துவரை அணுகுவதே சிறந்தது.
படைப்பு:
இ.இளையராஜா
கால்நடை மருத்துவ பட்டப் படிப்பு மாணவர்