நாவிற்கு விருந்தளிக்கும் நறுமண பால்

பரபரப்பான, வேகமாக  நகரும்  இந்த வண்ண மயமான உலகில் சுவையான சுத்தமான நறுமணமிக்க பல நிறங்களில் கண்களுக்கும் நாவிற்கும் விருந்தளிக்கும் உணவு வகைகள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்தில் உள்ள அனைவராலும் மிகவும் விரும்பப்பட்டு வருகின்றது. அதிலும் பல வண்ண ருசியான பால் குழந்தைகளால் அதிகம் விரும்பப்படுகிறது.

பால் புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், வைட்டமின்கள் போன்ற அனைத்து சத்துக்களும் நிரம்பிய ஒரு இன்றியமையாத சரிவிகித உணவாகவும். ஆனால், இத்தனை சத்துக்களும் அடங்கியுள்ளன பாலை அப்படியே பாலாக குடிக்க விரும்பாதவர்கள் பலரும் உண்டு. அதனால் பால் பிடிக்காதவர்களும் அள்ளி அள்ளிக் குடிக்கும் வகையில் வாசனை ததும்பும் சுவையான நறுமணப் பொருளாக மாற்றுவது பற்றி அறிந்துகொள்வது அவசியமாகிறது. பள்ளி முடிந்து வரும் குழந்தைகளுக்கு உற்சாகமூட்டும் வகையில் வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய நறுமண பால் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

நறுமண பால் என்பது பாலுடன் வாசனையூட்டிகளையும் அந்தந்த வாசனை வாசனையூட்டிகளுக்கு பொருந்தும் நிறமூட்டிகள் சேர்த்து தயாரிக்கும் ஒருவகையான பால் பொருளாகும் பாலில் அடங்கியுள்ள அனைத்து சத்துக்களும் குறிப்பாக கொழுப்புச்சத்து சரியான அளவில் இருக்கவேண்டும்.

 நறுமண பானம் என்று குறிப்பிடிக்கையில் அதில் குறைந்தபட்சம் 1-2 % கொழுப்புச் சத்து அடங்கியிருக்க வேண்டும். இதற்கு கொழுப்பு சத்து அதிகம் உள்ள பாலை வாங்கி பயன்படுத்தலாம் கொழுப்பு சத்து வாரியாக பலவகை பால் பாக்கெட்டுகளில் இன்று பல நிறுவனங்கள் மூலம் பால் விற்கப்படுகின்றது.

நறுமண பால் தயாரிப்பதன் ஆல் ஏற்படும் நன்மைகள்

  1. சுவையானது
  2. சத்தானது
  3. பால்குடிக்க விருப்பமில்லாதவர்கள் கூட பாலை விருப்பமாக குடிக்கும் வகையில் நறுமணமாக மாற்றக்கூடியது
  4. பாலின் தரத்தை மதிப்புக்கூட்டி விற்பனை அதிகரிக்கலாம்
  5. கொழுப்பு சத்து நீக்கப்பட்ட பாலையும் நறுமண பாலாக மாற்றுவதன் மூலம் அதிக லாபத்தை பெறலாம்

நறுமண பால் வகைகள்

  1. பழ நறுமண பால் 
  2. சாக்லேட்  நறுமண பால் 
நறுமண பால்

 நறுமண பால்

 நறுமண பால் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் வாசனையூட்டிகள்

  • ஸ்ட்ராபெரி
  • ஆரஞ்சு
  • வாழைப்பழம்
  • அன்னாசி பழம்
  • வெண்ணிலா
  • ஏலக்காயை ஆகியன

நறுமண பால் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் நிறமூட்டிகள்

உடலுக்குத் தீங்கு விளைவிக்காத, உணவில் சேர்க்க பரிந்துரைக்கப்பட்ட நிறமூட்டிகள் மட்டுமே பயன்படுத்தவேண்டும். நிறமூட்டிகள் மஞ்சள், பச்சை, ஆரஞ்சு மற்றும் ரோஸ் நிறங்களில் கிடைக்கின்றன.

நறுமண பால் செய்முறை

பாலை ஒரு சுத்தமான பாத்திரத்தில் வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும் பின்னர் பாலானது 35 முதல் 40 டிகிரி வெப்பநிலை அடையும் முறை சூடுபடுத்த வேண்டும். பால் இந்த வெப்ப நிலையை அடைந்ததும் அதனுடன் சாக்லேட் பவுடர் (சாக்லேட் நறுமண பால் தயாரிப்பதற்கு) சர்க்கரை (10%  அளவில் அதாவது ஒரு லிட்டர் பாலுக்கு 100 கிராம் சர்க்கரை) நிறமூட்டிகள் சிறிதளவு மட்டுமே சேர்த்து நன்கு கலக்கி விட வேண்டும் இடைஇடையே பாலை நன்றாக கலக்கிவிட வேண்டும் இவ்வாறு செய்வதன் மூலம் பால் அடிபிடிப்பதை தடுக்கலாம், ஒரு கொதி வந்தவுடன் மிதமான தீயில் அரை மணி நேரம் வரை வைத்து விடவேண்டும் பின்பு அது அறை வெப்ப நிலையை அடையும் வரை ஊறவைக்கவேண்டும் பின்னர் அதனை 5 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையை அடையும் வரை குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டும் பின்னர் அதனை சிறு சிறு பாட்டில்களில் அல்லது குடுவையில் ஊற்றி குளிர்சாதன பெட்டியில் 5 டிகிரி செல்சியஸ் வைக்கவேண்டும் சுவையான ஆரோக்கியமான எளிதில் தயாரிக்கக்கூடிய நறுமண பால் தயார் .

பழச்சாறு தயாரிக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை

  1. அதிக புளிப்பு சுவை கொண்ட பழச்சாற்றை சேர்க்கக்கூடாது ஏனென்றால் அமிலத் தன்மையால் பால் தெரிந்துவிடும்.
  2. ஒரு பாகம் பழச்சாற்றுடன் 5 பாகம் பால் சேர்க்க வேண்டும்.
  3. பழச்சாற்றில் அதிக சர்க்கரை சேர்க்கக்கூடாது.
  4. எந்தப் பழமானாலும் தோல் நீக்கிய பின்பு அரைத்து வடிகட்டி பழச்சாற்றை மட்டும் சேர்க்க வேண்டும்.
  5. அந்த பழத்தின் நிறத்திற்கு ஏற்ப அதற்குப் பொருந்தும் நிறமூட்டிகள் மற்றும் வாசனையூட்டிகளை சேர்க்க வேண்டும்
  6. அருந்துவதற்கு முன்பு ஒன்றிலிருந்து இரண்டு முறை நன்கு கலக்க வேண்டும்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்து மகிழும் வகையில் நறுமண பால் அமையும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை

முனைவர். சா. தமிழ்க்குமரன் (கால்நடை நண்பன் JTK)கால்நடை மருத்துவர் /பண்ணை ஆலோசகர் புதுச்சேரி. 
Dr. சே. கஸ்தூரி  உதவி பேராசிரியர் புதுச்சேரி. 
  • kalnadainanbanjtk

    Related Posts

    கறவை மாடு வளர்ப்பவர்களுக்கு பெருமளவு பொருளாதார இழப்பை ஏற்படுத்த கூடிய நோய் – இதை தடுப்பதற்கான வழிமுறைகள்

    பெரியம்மை நோய் அதிகமாக மாடுகளில் மட்டும் பரவும். மற்ற கால்நடைகளில் இந்த நோய் தொற்றை காண்பது அரிது.  குறிப்பாக கறவை மாடுகளில் அதிகம் காணப்படும்.  அனைத்து வயது மாடுகளையும் தாக்கக்கூடியது.  இயல்பாக மாடுகளுக்கு வைரஸ் கிருமியால் பரவக்கூடிய முக்கியமான நோய்களில் இதுவும்…

    மாடுகளில் சினை காலம்

    மாடுகள் கன்று ஈனுவதற்கு 280 நாட்கள் ஆகும். எருமை மாடுகள் கன்று ஈனுவதற்கு 300 நாட்கள் ஆகும். சில நேரங்களில் கன்று 10 நாட்களுக்கு முன்னரோ அல்லது 10 நாட்களுக்கு பின்னரோ கன்று ஈன கூடும். காளைக்கு சேர்த்த அல்லது சினை…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    கறவை மாடு வளர்ப்பவர்களுக்கு பெருமளவு பொருளாதார இழப்பை ஏற்படுத்த கூடிய நோய் – இதை தடுப்பதற்கான வழிமுறைகள்

    கறவை மாடு வளர்ப்பவர்களுக்கு பெருமளவு பொருளாதார இழப்பை ஏற்படுத்த கூடிய நோய் – இதை தடுப்பதற்கான வழிமுறைகள்

    கேள்வி பதில் தொகுப்பு

    • By Dr JTK
    • October 20, 2024
    • 307 views
    கேள்வி பதில் தொகுப்பு

    மாடுகளில் சினை காலம்

    கறவை மாடுகளைப் பற்றிய கவிதை தொகுப்பு

    கறவை மாடுகளைப் பற்றிய கவிதை தொகுப்பு

    மாவட்ட வேளாண் அறிவியல் நிலையங்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண்

    கறவை மாடு வளர்ப்பவர்களுக்கான விவசாய கடன் அட்டை (Kisan Credit Card)

    error: Content is protected !!