மழைக் காலங்களிலும் பணி காலங்களிலும் இயல்பாக கால்நடைகளுக்கு சுவாச நோய் பிரச்சினைகள் ஏற்படும் அதன் முதல் அறிகுறியாக மூக்கிலிருந்து சளி வடியத் தொடங்கும்.

இதற்கு முதலுதவியாக நாம் என்ன செய்ய வேண்டும் ???
1.சாம்பிராணி புகையில்
வேப்பம்பட்டையை சிறு துகள்களாக நுணுக்கி புகையிட்டு கால்நடைகளை வேது பிடிக்கலாம்.
2. Tincture Benzoin எனப்படும் கிருமி நாசினியை 1 ml எடுத்து நன்றாக கொதித்த தண்ணீரில் ஊற்றும்போது வெளிவரும் புகையை வேது பிடிக்கலாம்
சுவாச குழாய்களில் இருக்கும் சளியானது வெளியேறும்.
மாடு செருமிக்கொண்டு இருந்தால் என்ன காரணம்????
மழைக்காலங்களில் மாடுகளுக்கு சளி பிடித்த காரணமாக இருக்கலாம். சுவாசக் குழாயில் உள்ள உட்புற ஒட்டுண்ணிகள் ஆக கூட இருக்கலாம்.
அருகில் உள்ள கால்நடை மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்வதே சிறந்தது மேலே கூறப்பட்டுள்ள முறையை முதலுதவியாக செய்யலாம்.
குறிப்பு: இது முதலுதவி மட்டுமே, சளி அதிகரித்தால் அருகில் உள்ள கால்நடை மருத்துவரை அணுகுவது சிறந்தது