
மாட்டின் கோமியத்தை பிடித்து வைத்து அதில் சோற்றுக்கற்றாழை சேர்த்து ஒரு நாள் முழுதும் ஊறவைத்து மறுநாள் அந்தக் கலவையை எடுத்து உண்ணிகள் இருக்குமிடத்தில் தடவினால் உண்ணிகள் கொட்டிவிடும்.
தகவல்: ஸ்ரீனிவாசன்

தேவையான அளவு தும்பைப் பூவை எடுத்து அதை அரைத்து உண்ணி இருக்கும் இடத்தில் தடவி வரலாம்.
வேப்ப எண்ணெய் மற்றும் இலுப்பை எண்ணெய் இவை இரண்டும் சம அளவு எடுத்து ஒன்றாக கலந்து உண்ணி இருக்கும் இடத்தில் தடவி வரலாம்.
மேலே குறிப்பிட்டுள்ள வழிமுறைகள் கால்நடை வளர்ப்பவர்களால் பயன்படுத்தப்பட்டு பலன் கிடைத்த வழிமுறைகளாகும்.
உன்னி மருந்து மாட்டுக் கொட்டகையை சுற்றி உள்ள இடங்களில் தான் அடிக்க வேண்டும். மாட்டுக்கொட்டகையின் உள்ளே அடிக்க சொல்லவில்லை.
4 மூலைகளிலும் முக்கியமாக அடிக்கவேண்டும்.
அதுவும் கால்நடைகள் இல்லாத சமயத்தில் அடிக்கவேண்டும்.
குறிப்பு: இது மாட்டின் மேல் இருக்கும் உண்ணிகளை மட்டுமே நீக்கும். மாடு, மாடுகளை கட்டும் இடம், மாட்டுக் கொட்டகை ஆகிய மூன்று இடங்களையும் சுத்தப்படுத்தினால் மட்டுமே முழுமையாக உண்ணிகளை ஒழிக்க முடியும்.