தானியங்கள் அனைத்தையும் அரைத்து ஊற வைத்துக் கொடுப்பது சிறந்தது. கஞ்சியாக காய்ச்சி கொடுப்பது தவறு.
அதிகபட்சம் ஒரு நாளைக்கு ஒரு கிலோ என்ற அளவில் தானியங்களை மாடுகளின் தீவனத்தில் கலந்து கொடுத்து வரலாம்.

தானியங்களை மண் போன்ற நர நர என்று இருக்கும் பக்குவத்தில் அரைத்துக் கொடுப்பது சிறந்தது

கூழாக காய்ச்சி கொடுக்கும்போது தானியங்கள் முழுமையாக ஜீரணிக்க படுவதில்லை கொடுப்பதில் பாதி வீணாகிவிடும்.
அதேபோல் தானியங்களை முழுமையாக பாதியாக உடைத்து கொடுப்பதை தவிர்க்க வேண்டும். தானியங்களை அப்படி கொடுக்கும்போது அது சரியாக ஜீரணிக்க படாமல் சாணத்தில் அப்படியே வெளியேறும்.
அதிக அளவில் அரிசி மற்றும் தானிய மாவுகளை கால்நடைகளுக்கு அளிக்கும்போது மாடுகளின் உணவுப் பையிலுள்ள நுண்ணுயிர்கள் இறக்க நேரிடும் இதனால் அஜீரண கோளாறு ஏற்படும்
குறிப்பு: முடிந்த அளவு அரிசி மற்றும் கோதுமையை கறவை மாடுகளுக்கு கொடுப்பதை தவிர்க்கவும்